
தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories
இந்த போட்காஸ்ட் தமிழ் சிறுகதைகளை கேட்பவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு தமிழ் சிறுகதை வாசிக்கப்படுகிறது. கதைகளைக் கேட்டுவிட்டு தங்கள் கருத்துக்களைக் கடிதம் மூலம் அனுப்புபவர்களுக்கு தமிழகம் தொடர்பான பழமையான அஞ்சல் அட்டை பரிசாக அனுப்பப்படும். கதைகளின் ஆசிரியர்கள் அல்லது பதிப்பாளர்கள் கேட்டுக்கொண்டால், அந்த சிறுகதைகள் உடனடியாக நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Episodes

பச்சை பூனை ~ ஹெச்.ஜி. ரசூல்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீனத்துவ எழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூல் எழுதிய 'பச்சை பூனை' சிறுகதை, 2002-ல் வெளியான 'சலாம் இசுலாம்' தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கதை இஸ்லாமிய வாழ்வியலில் நிலவும் இறையியல் மாற்றங்கள் மற்றும் சமூகச் சிக்கல்களை விளிம்புநிலை மக்களின் பார்வையில் நுணுக்கமாக விவரிக்கிறது. மதம், கலாச்சார மரபுவழி கட்டுப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி, சிறுபான்மை மற்றும் பெண்ணி

நான் ஒன்றும் நளாயினி இல்லை ~ ஜோதிர்லதா கிரிஜா
ஜோதிர்லதா கிரிஜா எழுதிய 'நான் ஒன்றும் நளாயினி இல்லை' சிறுகதை, புராண காலத்து பொறுமை வாய்ந்த நளாயினி போல அடிமையாக வாழ மறுத்து, தற்காலப் பெண்ணின் சுதந்திரம் மற்றும் சுயமரியாதையை வலியுறுத்தும் ஒரு பெண்ணிய படைப்பாகும். குடும்ப ஒடுக்குமுறைகளை உடைத்து, தன் அடையாளத்தை நிலைநாட்ட விரும்பும் பெண்ணின் குரலாக இக்கதை அமைந்துள்ளது.

இறந்தவன் எழுதுகிறேன் ~ கோரி
இறந்தவன் எழுதுகிறேன் ~ கோரி

வந்தாரை ~ அ. கரீம்
வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் அ. கரீம் (A. Kareem) எழுதிய 'வந்தாரை' என்ற சிறுகதை, 1998-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நிகழ்ந்த வன்முறைச் சூழலின்போது சாதாரண இஸ்லாமிய மக்கள் எதிர்கொண்ட இன்னல்களையும், குறிப்பாக ரத்தினபுரி போன்ற பகுதிகளில் நிலவிய பதற்றத்தையும் ஒரு சாட்சியமாகப் பதிவு செய்கிறது. இக்கதை அவரது புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பான 'தாழிடப்பட்ட கதவுகள்' (Ethir Veliyeedu வெளியீடு) நூலில

இந்தியா கேட் ~ காவேரி
எழுத்தாளர் காவேரி (லக்ஷ்மி கண்ணன்) எழுதிய 'இந்தியா கேட்' சிறுகதை, பெண்கள் மீதான கலாச்சார கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களின் சுதந்திரத்தை முடக்கும் சமூகச் சூழலை, டெல்லி இந்தியா கேட் பின்னணியில் விவரிக்கும் ஒரு காத்திரமான படைப்பாகும். இக்கதை, பத்மினி என்ற பாத்திரத்தின் வழியாகப் புகுந்த வீட்டின் கட்டுப்பாடுகளையும், வெளிகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் தடைகளையும் அம்பலப்படுத்துகிறது.

வான்கா ~அந்தோன் செகாவ்
அன்டன் செக்கோவ் (Anton Chekhov) எழுதிய புகழ்பெற்ற ரஷ்யச் சிறுகதை "வான்கா" (1886). இது மாஸ்கோவில் செருப்புத் தொழிலாளியிடம் வேலை செய்யும் 9 வயது அனாதை சிறுவன் வான்கா, தன் தாத்தாவுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தைப் பற்றியது. கொடூரமான எஜமானரிடம் சித்திரவதைகளை அனுபவிக்கும் சிறுவனின் பசி, தனிமை மற்றும் தாத்தாவைச் சந்திக்க ஏங்கும் அவல நிலையை இக்கதை சித்தரிக்கிறது.

தற்காலிக உன்னதங்கள் ~ ரேவதி பாலு
தற்காலிக உன்னதங்கள் ~ ரேவதி பாலு

பிரியங்கள் ஓய்வதில்லை ~ ரேவதி பாலு
சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல்,
ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு
ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை
தொலைக்கா

நஞ்சு ~ வாசந்தி
பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட வாஸந்தி, மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நோர்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல

இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி ~ கண்மணி ராஜா
இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி எனும் சிறுகதையை கண்மணி ராஜா எழுதியுள்ளார். இவரின் இந்தக் கதை தமிழ் சிறுகதை உலகில் மிகவும் பேசப்பட்ட ஒரு கதையாகும்.

குழப்பத்தின் சுற்றுப்பாதை ~ சல்மா
குழப்பத்தின் சுற்றுப்பாதையில், ஒரு பெண் தன் கல்வியறிவற்ற தாய்க்கு அவள் எழுப்பும் காதல், வெறுப்பு மற்றும் கோபம் போன்ற முரண்பட்ட உணர்ச்சிகளை சமாளிக்க கடிதம் எழுதுகிறாள். தாய், தன் கணவனுக்கு அடிமையாகி, தன் குழந்தைகளின் மீது பற்று கொண்டு, மருமகளை வீட்டை விட்டு விரட்டும் அளவுக்குத் துன்புறுத்தினாள். கடிதத்தில், அவள் இந்த தேவையற்ற விரோதத்தை உணர முயற்சிக்கிறாள், ஆனால் அவளுடைய செயல்களை அரிதாகவே புரிந்து க

ஓர் அகலிகளையின் மகள் ~ அய்க்கண்
அய்க்கண் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இவர் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். தமிழக அரசு பதினாறு சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அதில் இவரது கதையும் இடம்பெற்றுள்ளது. அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் இவர் எழுதிய நாடகம் முதல் பரிசு பெற்றது. இந்நாடகம் 19

ஷர்புதீன் பக்ரீஷா ~ கழனியூரன்
எம். எஸ். அப்துல் காதர் தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் கழனியூரன் என்னும் புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியவர். கரிசல்காட்டு எழுத்தாளரான கி. இராசநாராயணனின் தொடர்பால் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபாடு கொண்டார். திருநெல்வேலி மாவட்ட நாட்டார் கதைகளைத் தொகுத்ததாலும் அப்பகுதியின் வழக்காறுகளைத் தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்துவதாலும் இவரை தமிழிலக்கிய உலகம் இவரை செவக்காட்டு கதைசொல்லி என்கிற

வெள்ளிக்கிழமை ~ நாகூர் ரூமி
இவர் சாகுல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப்
பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமி

நளாயினி ~ கலைஞர் மு. கருணாநிதி
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்

ஹிட்லினி ~ ஆதவன் தீட்சண்யா
எஸ். எம். இரவிச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் செயல்பட்டார்.

ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் ~ சு.சமுத்திரம்
சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் பணியாற்றினார். இவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன இவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்

தர்மத்தின் ஆகுதி ~ அ.வெண்ணிலா
அ. வெண்ணிலா தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மல

ராஜ வைத்தியம் ~ மைதிலி சம்பத்
ராஜ வைத்தியம் ~ மைதிலி சம்பத்

ஜெயித்தாளா தோற்றாளா ~ மைத்திலி சம்பத்
ஜெயித்தாளா தோற்றாளா ~ மைத்திலி சம்பத்

புலி நகம் ~ மைதிலி சம்பத்
புலி நகம் மிக முக்கியமான சிறுகதை. மைதிலி சம்பத் தமிழின் மிக முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்.

பருந்துகள் ~ மாதவிக்குட்டி
கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில்

பூனைகள் இல்லாத வீடு ~ சந்திரா
சந்திரா தங்கராஜ் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள். சந்திராவின் முதல் சிறுகதை புளியம்பூ 2000-ல் எழுதப்பட்டது. 2006-ல் காலச்சுவடு பெண் எழுத்தாளர்களுக்கான புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய புளியம்பூ மற்றும் கிழவிநாச்ச

மரப்பாச்சி ~ உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி எனும் மஹி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் பதின் பருவம் முதல் எழுதி வருகிறார். உமா மகேஸ்ரி தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர் . தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார். இவரின் இந்தக் கதை குழந்தைகளின் உலகினை நம் கண்முன்னர் காட்டிச் செல்கிறார்.

ஹார்மோனியம் ~ செழியன்
செழியன் (Chezhiyan) தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி ஒளிப்பதிவாளராக உள்ளார். இவர் கட்டுமானத் துறைப் பொறியியல் படிப்பை முடித்தபின் பி. சி. சிறீராமிடம் ஒளிப்பதிவாளராக தன் பணியைத் தொடங்கினார். செழியன் தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்தவர். கல்லூரி என்ற திரைப்படத்தின் அறிமுகமாகி, இயக்குநர் பாலாவின் பரதேசி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகி, அப்படத்தின் ஒளிப்பதிவுக்காக 2013 ல் இலண்டன் திரைப்பட விழாவில் சி

அழகர்சாமியின் குதிரை ~ பாஸ்கர் சக்தி
அழகர்சாமியின் குதிரை எழுதிய பாஸ்கர் சக்தி ஒரு திரைக்கதை ஆசிரியரும் கூட. இவரது கதைகள் மக்களின் வாழ்வியலை எடுத்துக்கூறுபவையாக உள்ளது.

வேட்டை ~ யூமா வாசுகி
யூமா வாசுகி என்ற புனைபெயரில் எழுதும் தி. மாரிமுத்து கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன்கொண்டு இயங்கி வருகிறார். மலையாள எழுத்தாளர் எழுதிய `கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை ‘கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, பிற மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்காக 2017- ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இவரு

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ~ சுப்ரபாரதிமணியன்
சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பலதளங்களிலும் 35 வருடங்களாக எழுதி வருபவர்.
அனைவராலும் அறியப்பட்டவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு
விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை
பாதுகாத்தல் போன்ற

நுகம் ~ எக்பர்ட் சச்சிதானந்தம்
எக்பர்ட் சச்சிதானந்தத்தின் எழுத்து அடுக்கி வைத்தார்போல் வரிகள், அளவெடுத்த வார்த்தைகள் , செறிவன உள்ளடக்கம்
இறுதியில் உள்ளடங்கிய மவ்னம் என இவரது சிறுகதைகள் இருக்கும். தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர்
பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வலிகள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை. இந்த மனிதர்களின் விசும்பல்கள் வழி உயர்

முள் ~ சாரு நிவேதிதா / ~ Charu Nivedita
சாரு நிவேதிதா தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இவரது நாவல் ஸீரோ டிகிரி, சுவி

காசி ~ பாதசாரி / KAsi ~ PathasAri
எழுத்தாளர் பாதசாரி அதிகம் எழுதியவர் இல்லை. ஒரு சிறுகதை தொகுப்பும் ஒரு கவிதை தொகுப்பும் மட்டுமே வெளி வந்திருக்கிறது. மிகக் குறைவாக எழுதியும் கூட அவருடைய 'காசி' இல்லாத சிறந்த சிறுகதை பட்டியலே இல்லை.

கருப்பு ரயில் ~ கோணங்கி / Konangi ~ Karuppu Rail
கோணங்கி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் இளங்கோ. 1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர். கல்குதிரை என்ற சிற்றி

அந்நியர்கள் ~ ஆர். சூடாமணி
ஆர். சூடாமணி தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர். இவரது ’அந்நியர்கள்’ மிக முக்கிய சிறுகதையாக கருதப்படுகிறது.

வெயிலோடு போய் ~ ச.தமிழ்ச்செல்வன் / VeyiLodu Poi
ச.தமிழ்ச்செல்வன் 1954ல் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும்... என மாறி மாறி பணியாற்றியவர். படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அ

காலத்தின் விளிம்பில் ~ பாவண்ணன் / KAlathin Vilimbil ~PAvannan
பாவண்ணன் 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை நா. பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம் சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சிற்றிதழ்களிலும் பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதிவருகிறார். தமிழ்ச் சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து ’எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் ’திண்ணை’ என்னும

S Ramakrishnan speech on Balzak • எஸ்.ராவின் உலக இலக்கிய பேருரை - பால்சாக்
பால்சாக்கின் வாழ்வு மற்றும் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
யதார்த்தவாத எழுத்தின் நாயகராகக் கொண்டாடப்படும் பால்சாக் சிறுகதை, குறுநாவல் நாவல்கள் என எழுதிக் குவித்தவர்.

சித்தி ஒரு திருணையின் பூர்வீகம் ~ சுயம்புலிங்கம் / Oru Thirunaiyin poorvegam ~ Suyambulingam
முன்மாதிரி இல்லாத, எவரும் பின்தொடரவும் முடியாத ஒரு எழுத்து முறைக்குச் சொந்தக்காரர் மு.சுயம்புலிங்கம். கோணங்கி கொண்டு வந்த ’கல்குதிரை ’-’சுயம்புலிங்கம் சிறப்பிதழ்’ மூலமாகவும் கி .ராஜநாராயணன் தொகுத்த கரிசல் கதைத்திரட்டு வழியாகவும் வெளி உலகுக்குப் பரவலாகத் தெரிய வந்தவர் சுயம்புலிங்கம். அவரே நடத்திவந்த ’நாட்டுப் பூக்கள்’ என்கிற கையெழுத்து இதழில் வெளிவந்திருந்த கவிதைகளையும்

சித்தி ~ மா. அரங்கநாதன் / Ma. Aranganathan ~ Chithi
மா. அரங்கநாதன் கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம்) கிராமத்தில் பிறந்தவராவார், பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் சங்க இலக்கியம், சைவ சித்தாந்தம், மேலைநாட்டு இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் முன்றில் என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்திவந்தார், 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்த இந்த இதழ் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தை பெற்றது. இவ

இருளப்ப சாமியும் 21 ஆட்டுக்கிடாய்களும் ~ வேல ராமமூர்த்தி / Irulappa Samiyum 21 Attukkidaiykalum ~ Vela Ramamoorthy
வேல ராமமூர்த்தி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் மற்றும் நடிகராவார். தமிழ் மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்களில் அவ்வப்போது தோன்றி நடித்துவருகிறார். குற்றப்பரம்பரை வரலாற்றின் காலகட்டத்தை திரையில் கொண்டுவரும் பெரிய சவாலை பாலாவுக்காக திரைக்கதையாக இவர் எழுதிக்கொண்டிருக்கிறார். வேல ராமமூர்த்தி எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வேல ராமமூர்த்தி கதைகள் என வெளியிடப்பட்டுள்ளது.

காகிதக் குப்பைகள் ~ எல். லக்ஷ்மணன் / kAkitha kupaigaL ~ L.Lakshmanan
வானொலி நாடக ஆசிரியரான எல். லக்ஷ்மணன் , வெளிநாட்டு சிற்றலை வானொலிகளின் நேயரும் கூட. திருநெல்வேலி அகில இந்திய வானொலியில், இவரது நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. இவரது இந்த சிறுகதை கனடா எம்டிஆர் எப்.எம் வானொலியில் ஒலிபரப்பாகியது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு கப் காபி ~ இந்திரா பார்த்தசாரதி
இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இரு

பச்சை கனவு ~ லா. ச. ராமாமிர்தம்
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி

மூன்று நகரங்களின் கதை ~ க. கலாமோகன்
க. கலாமோகன் இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். இவரது கவிதைகள் டேனிசு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.கே.எல்.நேசமித்திரன் என்ற புனைபெயரிலும் எழுதியவர். புலம்பெயர முன்னர் கொழும்பில் பத்திரிகையாளராகப் பணியாற்றிவர். 1983 இல் இருந்து பிரான்சில் புலம்பெயர்

அரசனின் வருகை ~ உமா வரதராஜன்
உமா வரதராஜன் (உடையப்பா மாணிக்கம் வரதராஜன்) கிழக்கிலங்கை, பாண்டிருப்பு, கல்முனை, இலங்கையில் பிறந்தவர். ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டிருந்தாலும் முதன்மையாக சிறுகதையாசிரியராகவே அறியப்படுகின்றவர். தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம

மூங்கில் குருத்து ~ திலீப்குமார்
திலீப்குமார், இலக்கிய திறனாய்வாளர், சிறுகதையாசிரியர். குஜராத்தி மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்று கொண்டவர். சிறுகதை, இலக்கிய திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்தத்தின் கனத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவப்பூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். 2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாஷா பாரத

நீக்கல்கள் ~ சாந்தன்
சாந்தனின் கதைகளில் சாந்தன்தான் கதாநாயகன். சாந்தனே கிருஷ்ணன். சாந்தனே ரமணன். சாந்தனுடைய படைப்புகளெல்லாம் சொந்த அனுபவங்களை அடித்தளமாய்க் கொண்ட யதார்த்தமான முயற்சிகளாகையால், சாந்தனின் கதைகளுக்குத் தலைமையேற்க எந்தவொரு கற்பனைப் பாத்திரத்துக்கும் தகுதியில்லை. இவரது ’நீக்கல்கள்’ சிறுகதையானது மிக முக்கியச் சிறுகதையாக கருதப்படுகிறது.

இறகுகளும் பாறைகளும் ~ மாலன்
மாலன் என அறியப்படும் மாலன் நாராயணன் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும்' சாகித்திய அகாதமி விருது பெற்றவரும் ஆவார். புதிய தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும், சன் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும் திசைகள் என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ’இறகுகளும

காலமும் ஐந்து குழந்தைகளும் ~ அசோகமித்திரன்
அசோகமித்திரன் தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது . தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்க

இன்னாட்டு மன்னர் ~ நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் வீர நாராயணமங்கலத்தில் (கன்னியாகுமரி மாவட்டம்) பிறந்தார். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்

இல்லாள் ~ கி. ராஜநாராயணன்
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா. 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின்

தங்க ஒரு ~ கிருஷ்ணன் நம்பி
கிருஷ்ணன் நம்பி குமரி மாவட்டத்தில் அழகியபாண்டிபுரத்தில் பிறந்து பூதப்பாண்டி என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவரும் சுந்தர ராமசாமியும் இலக்கிய இரட்டையர் என்று அறியப்பட்டார்கள். 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிருஷ்ணன் நம்பிக்கு திருமணம் ஆயிற்று. மனைவி பெயர் ஜெயலட்சுமி. `நவசக்தி’யில் ஃபுருஃப் ரீடர் வேலை பார்த்தார். அப்போது ப. ஜீவானந்தம் அவர்களின் தொடர்பு கிடைத்தது . கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள்,

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் ~ ஜி.நாகராஜன்
ஜி. நாகராஜன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள்

தனுமை ~ வண்ணதாசன்
வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம். இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வ

புற்றில் உறையும் பாம்புகள் ~ இராசேந்திர சோழன்
தமிழ்ச் சிறுகதை மரபில் தன்னுடைய ‘எட்டு கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் அதிர்வுகளோடு அடியெடுத்துவைத்த இராசேந்திர சோழன் ஒரு முக்கியமான நிகழ்வு. மார்க்ஸியமும் நவீன அழகியலும் அபூர்வமாக இணைந்த முதல் தமிழ் சாத்தியம் அவர். எட்டு கதைகளோடு வெளிவந்த இவரது இன்னொரு சிறுகதை நூலான ‘பறிமுதல்’ முற்போக்கு இலக்கிய வகைமையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய தொகுப்பாகும். மொழியின் ச

நகரம் ~ சுஜாதா
சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். இ

பைத்தியகார பிள்ளை ~ எம்.வி.வெங்கட்ராம்
எம்.வி.வெங்கட்ராம் தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது ’பைத்தியகார பிள்ளை’ மிக முக்கிய சிறுகதையாக கருதப்பபடுகிற

சாமியார் ஜூவுக்கு போகிறார் ~ சம்பத்
1941 திருச்சியில் பிறந்த சம்பத், வளர்ந்ததும் படித்ததும் டெல்லியில். டெல்லி ரயில்வேயில் உயரதிகாரியாகப் பணியாற்றிய அவருடைய தந்தை பணி ஓய்வுபெற்று சென்னை திரும்பியபோது சம்பத்தும் தன் குடும்பத்துடன் சென்னை வந்தார். எம்.ஏ. (பொருளாதாரம்) பி.எட். படித்திருந்த சம்பத், சென்னை வாழ்வின் தொடக்கத்தில் ஆய்வு நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றினார். கடைசி சில ஆண்டுக

காடன் கண்டது ~ பிரமிள்
பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரின் ’காடன் கண்டது’ கண்டது மிக முக்கியமான சிறுகதைகயாக கருதப்படுகிறது.

தமிழ் இலக்கியப் பேரவை ~ ஜெ.ஜெ.சித்ராதேவி
தமிழ் இலக்கியப் பேச்சாளரான ஜெ.ஜெ.சித்ராதேவி தமிழ் மீதும். இசை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மதுரை, சென்னை அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகவும், தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது “தமிழ் இலக்கியப் பேரவை” மிக முக்கியமான சிறுகதையாகும்.

சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் ~ ஆதவன்
ஆதவன் (Aadhavan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவரது இயற்பெயர் கே.எசு.சுந்தரம் ஆகும். 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் இவர் பிறந்தார். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். முதலில் இரவு வரும் என்ற சிறுகதை நூலுக்கு 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது.

தாலியில் பூச்சூடியவர்கள் ~ பா. செயப்பிரகாசம்
பா. செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். மூன்றாவது முகம், இரவுகள் உடைபடும் ஆகிய தொகுப்புகள் சூரியதீபன் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. 1965 இந்தி எதிர்ப்பு

பிரசாதம் ~ சுந்தர ராமசாமி
நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் சுந்தர ராமசாமி. இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக ப

ஒரு ராத்தல் இரைச்சி ~ நகுலன்
டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கோமதி ~ கி. ராஜநாராயணன்
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.

ராஜா வந்திருக்கிறார் ~ கு. அழகிரிசாமி
கு. அழகிரிசாமி தமிழின் குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.

பாயசம் ~ தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடியில் பிறந்தவர். புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா. என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.

தீட்டு ~ அருண்.மோ
அருண். மோவின் இந்த படைப்பு ஊடகத்துறை உட்பட அனைத்து தரப்பினரையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு சிறிய சிகப்பு துணிக்கு இவ்வளவு பிரச்சனையா? ஒரு வேலை அது இருக்கும் இடம் தான் பிரச்சனையாகியிருக்குமோ? விரிவாக கேளுங்குள் ‘தீட்டு’ சிறுகதையை, நிச்சயம், நீங்களும் கொஞ்சம் யோசிப்பீர்கள்.

குருபீடம் ~ ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.

கவந்தனும் காமனும் ~ புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ள

ஞானப்பால் ~ ந. பிச்சமூர்த்தி
ந. பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

வசுமதி வா போகலாம் ~ சந்திர கிருஷ்ணன்
பேரா. சந்திர கிருஷ்ணன் தனித்துவமான எழுத்துக்கு சொந்தக்காரர். சிறு வயதில் நம்மோடு ஓடியாடி விளையாடியவர்களை பெரியவர்கள் ஆனபிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியே வேறு. அதுவும் அவர்கள் பெண்கள் எனில், இன்னும் கூடுதல் சந்தோஷம். ஆனால் அவர்கள் வாழ்க்கை குடும்ப சூழ்நிலையால் புரட்டிப் போடப்பட்டிருக்கும் போது இந்த சந்திப்பு நிகழ்ந்தால்?! மிக நேர்த்தியாக அதை இந்த ”வசுமதி வா போ

ஒரு வார்த்தை ~ சிவசங்கரி
சிவசங்கரி நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வெளியிட்டுள்ளார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.

இடுக்கி ~ முத்துராசா குமார்
தற்காலத் தமிழிலக்கியத்தின் நம்பிக்கைக்குரிய இளம் கவிஞர்களில் ஒருவர் முத்துராசா குமார். 'பிடிமண்', 'நீர்ச்சுழி' என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் மூலம் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருந்த முத்துராசா, 'ஈத்து' என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் இப்போது சிறுகதையாசிரியராகவும் பரிணமித்திருக்கிறார். (விகடன் டாட் காம்)

என்னை மன்னித்துக்கொள் தாவீது ~ அகரமுதல்வன்
பிபிசி தமிழோசையைக் கேட்டவர்களுக்கு நிச்சயம் இந்த கதை நெருக்கமானதாக இருக்கும். “என்னை மன்னித்துக்கொள் தாவீது” சிறுகதையின் மையக் கதாப்பாத்திரத்தின் பெயரே பிபிசி. அதற்கான காரணத்தினை அறிந்துகொள்ள அகரமுதல்வன் எழுதிய இந்த சிறுகதையை முழுமையாகக் கேளுங்கள். ஈழத்தின் போர்ச் சூழலை நேரடியாக நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் கதாசிரியர்.

பிரபஞ்ச ஞானம் - மௌனி
மௌனி (இயற்பெயர் - மணி, சூலை 27, 1907 - சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எ

கனகாம்பரம் - கு.ப.ரா
கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட கு. ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுகிறார்.

மகாராஜாவின் ரயில் வண்டி - முத்துலிங்கம்
1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நி

மனுசன மாத்தும்டா...மனுசனா மாத்தும்டா... ~ வாசுதேவன் அருணாச்சலம்
ஒரு நாவல் என்னவெல்லாம் செய்யும் வாசகனை, அதே போல் அந்த எழுத்தாளனையும் என்ன செய்யும் என்பதற்கு இந்த “மனுசன மாத்தும்டா...மனுசனா மாத்தும்டா...” எனும் திரு.வாசுதேவன் அருணாச்சலம் எழுதிய சிறுகதை நல்ல உதாரணம்.

ஒரு குவாட்டரும் அரைப் பிளேட் மட்டன் பிரியாணியும் ~ வாசுதேவன் அருணாச்சலம்
கிராமங்களில் நாட்டார் வழிபாட்டினை இந்த கோணத்திலும் பதிவு செய்ய முடிமா? என்பதற்கு இந்த “ஒரு குவாட்டரும் அரைப் பிளேட் மட்டன் பிரியாணியும்” சிறுகதை ஒரு உதாரணம். எழுதிய திரு.வாசுதேவன் அருணாச்சலம் அவர்களுக்கு சபாஷ்

இழைகள் சிரித்தால் - பாதசாரி
எழுத்தாளர் பாதசாரி நிறைய கதைகள் எழுதியிருந்தாலும் 'காசி' என்ற ஒரு சிறுகதையின் மூலமே புனைவு எழுத்தாளராக அறியப்பட்டார். அந்தக் கதையின் வழியாகவே இன்றுவரை புனைவு எழுத்தாளராக இருக்கின்றார்.
Recommended

Communicate101: Speaking Writing Tips!

The Balaji Storytime ( தமிழ்)

Agile Malayali Malayalam Podcast

Clinical neurology with KD

The Dhanya Varma Podcast - Malayalam Interviews

Make India Competitive Again

The Bollywood Radio

Heal Her Within™-Dil Se Baatein With Shalini

Indicast - All Podcasts

கதைகள் சூழ் உலகு - Kathaigal Soozh Ulagu

Psychovedas

Gumnam Saya – Horror Stories in Hindi